Pages

Thursday, December 1, 2011

இதய ராகம் - 6

நான் கண்ணீர் சிந்துவது உன்னால்,
அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..!
வாழ்னால் முழுவதும் கண்ணீரில் உருகி விடுகிறேன்.

இதயத்தில் நீ
இருந்தால்
உன்னை மறந்து
விடலாம்....
என் இதயமே..
... ... ... நீ என்றால்
எப்படி உன்னை
மறக்க முடியும்...

பிரிவை எந்த அளவிற்கு
வெறுக்கிறோம் என்பதை
பிரிந்திருக்கும் போது அல்ல,...
மீண்டும் சந்திக்கும் போது தான்
உணரமுடியும்....

நிஜங்கள்" தரும் சந்தோச‌த்தைவிட, "நினைவுகள்" தரும் சந்தோசம் அதிகம் !.
"நிஜங்கள்" நிலைப்பதில்லை !!. "நினைவுகள்" அழிவதில்லை !

எத்தனை முறை வேண்டுமானாலும்
காதலிக்க தயார்
அதில்
தோற்கவும் தயார்
நீ, என் காதலியாய் இருக்கும் பட்ச்சத்தில் !

இமைக்கும் என் கண்கள் உன்னை பார்க்காமல் இருக்கும்.!
ஆனால் துடிக்கும் என் இதையம்
உன்னை பற்றி நினைக்க மறுப்பதில்லை..!

அன்பே
நீ.....
நினைத்து பார்க்கும் அளவிற்கு என் உருவம் அமையாவிட்டாலும் நீயே நினைத்துபார்க்காத அளவிற்கு என் இதயத்தில் என்றும் நீயிருப்பாய் .....!

என்னை சந்தோஷ படுத்தி சிரிக்க
வைத்ததும் நீதான்.......... என்னை
விட்டு தூரம் சென்று அழ வைத்ததும்
நீதான்.............. இன்று உன்னை நினைத்து
அழுது சிரிக்கிறேன் .............. அன்பினால்
...பைத்தியமாகி

உன்னை மறந்து போக நினைத்து
மறந்து போனேன் உன்னை அல்ல என்னை ....

நீங்கள் சிரித்து பாருங்கள் உங்கள் முகம் உங்களுக்கு பிடிக்கும் ...மற்றவர்களை சிரிக்க வைத்து பாருங்கள் ...உங்கள் முகம் எல்லோருக்கும் பிடிக்கும் ......

மனிதனாய் பிறந்ததை விட..
மண்ணாய் பிறந்திருந்தால்..
உன் நிழலையாவது தாங்கிருப்பேன்...!

வடிவமைக்கிறேன் வாழ்க்கையை
சிற்பியும் நானே
சிற்பமும் நானே
வலியும் உளியும்
எனது அனுபவங்களே!

காரணம் இல்லாமல்
சிரிக்கலாம்...
ஆனால், கவலை இல்லாமல்
அழ முடியாது..

சிலருக்கு பனி துளி புடிக்கும்,
சிலருக்கு மழை துளி புடிக்கும்......
ஆனால், யாரையாவது உண்மையாக 'நேசித்து' பாருங்கள்
கண்ணீர் துளி கூட பிடிக்கும்......!

தவிக்கும் உள்ளத்துக்குத் தான் தெரியும் வலி எவ்வளவு கொடுமை என்பது...

இன்று இருப்பது..
நாளை இல்லாமல் போகலாம்
இன்று இல்லாதது நாளை நமக்கென இருக்கலாம்
அன்பும் காதலும் அப்படிதான்...
நிரந்தரமாக இல்லாமல் போனாலும்.
நிஜமானதாக இருக்கும்!

உன்னை அதிகம் நேசிப்பவர்கள் தான்
உன்னை அதிகம் காயப் படுத்துவார்கள்
நீ
காயப்படும் போது அதற்காக
அதிகம் துன்பப் படுபவர்களும்
அவர்கள் தான் ...!