Pages

Monday, October 3, 2011

இதய ராகம் Part 2

ஒவ்வொரு நொடியும் உன்னை நான் நினைத்து கொண்டிருக்கிறேன் ...
ஒரு நொடியாவது என்னை நீ நினைப்பாயா என்று....!

கண்ணீரைகூட இன்பமாய்
ஏற்றேன்
அவை நீ பரிசாக
கொடுத்துச்சென்றவை
என்பதனால்....!

நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும் ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும், காத்திருத்தல் எவ்வளாவு கடினம் என்று.....!

உறவுகள் மட்டும் நிரந்தரம் அல்ல...
பிரிவுகளும் நிரந்தரம் அல்ல...
நினைவுகள் மட்டுமே நிரந்தரம்....!

விடியாத இரவுகளில்
நான் நட்சத்திரங்களாய் காத்திருப்பேன்,
நீ சந்திரனாய் என்னுடன் ஊர்வலம் வருவாய் என்று...
அமாவாசை இரவுகளில்
நான் அழுவதை யார் அறிவார்???

உனக்காக
இல்லாவிட்டாலும் உன்
காதலுக்காக துடிக்கிறது
என் இதயம்......

கண்ணுக்குள் இருக்கும்
உன்னை
என் கண்ணீரால் கழுவுகின்றேன்,
காதலித்து கைவிட்ட கறை கூட
உன்மேல் இருக்க வேண்டாம் என்று.....!

என்னை பிடிக்கவில்லை
என்ற வார்த்தை கூட அழகு தான்
உன் உதடுகள் உச்சரித்தபோது.....!

தினமும் கன் விழித்து பார்க்கும் போது நீ அருகில் இல்லாத போது தான் நினைவில் வரும் நான் உன்னோடு வாழ்வது நிஜத்தில் இல்லை கனவில் தான் என்று ....!

உன்னை
மறக்க வேண்டும்..
என்றே நினைக்கிறேன்
என் நினைவே,
நீ தான்!
என்பதே அறியாமல்..

என் இதயம் கொண்ட காதல் பிரிந்து செல்வது தான்
நீ வெகு தூரம் போவதென்பது ஆனால்
என் கண்கள் கொண்ட உன் முக நினைவுகள் என்பது
அது தான் இன்று என் இதயம் கொண்ட நேசம்
என்றும் என்னுடன் இருக்கும் வரை என்
கவிதை பயணம் தொடரும்.

விழி திறந்து பார்அன்பே...
என் வலி உனக்கும் புரியும்..........

வழியும் என் கண்ணீரே......!
என் வழித்துணையாக வருவாயா...?
வேறு துணை வேண்டாம் எனக்கு

இந்த வலியிலும் ஒரு
ஆனந்தம் எனக்கு...
என்னுடன் நீயாவது எனக்காக நிரந்தரமாக வருவாயா?

எங்கள் பிழைகளுக்கு நாங்கள் நல்ல
வழக்கறிஞர்கள்.....,
மற்றவர்கள் பிழைகளுக்கு நாங்கள் நல்ல
நீதிபதிகள்.....!

மறந்தேன்
என்
நினைவுகளை
மறக்கமுடியாத
உன்
நினைவுகளால்...

உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்
அற்புத நிமிடங்களில்...
அனைத்தும் மறந்து
ஊமையாகிவிடுகிறது
என் உலகம்.......

உன் பிரிவை பற்றி அறியாமலே என் வாழ்நாட்களில் வழக்கம்போல வந்து ஏமாறுகின்றன
உன் கனவுகள்......

நீ என்னை விட்டு
எவ்வளவு தொலைவில் இருக்கிறாயோ
அவ்வளவு தொலைவிற்கும்
காதல் என்னைச் சூழ்ந்திருக்கிறது.......

உனக்காய் எழுதும்
மடல்கள் அனைத்தையும்
என் இதய முகவரிக்கே அனுப்புகிறேன்-
நீ குடியிருப்பது அங்கென்பதால் .....♥.ℒ☮Ṽℰ..

நான் எப்போது
உன்னை நினைக்க ஆரம்பித்தேனோ
அப்போதே
என்னை மறந்து விட்டேன்.
அதனால்தான் என்னவோ
என் காதலை
உன்னிடம் சொல்லவேண்டும் என்கின்ற
ஞாபகம் கூட எனக்கு வரவில்லை......!

அற்புதமான காதலை
மட்டுமல்ல,
அதை உன்னிடம்
சொல்ல முடியாத
அதி அற்புதமான
மௌனத்தையும்
நீதான் எனக்குத்
தந்தாய்.... ♥

எனக்குத் தெரியும்,
நீ விரும்புவது என்னையல்ல...
என் கவிதைகளைத் தான் என்று..
ஆனால்,
உனக்குத் தெரியுமா.?
உன்னை விரும்புவது-
என் கவிதைகளல்ல,
நான் தான் என்று...?

என் இதயத்தில் ஊஞ்சல் கட்டி நித்தமும் ஆடுபவளே....!
நிறுத்தி விடாதே உன் ஆட்டத்தை நின்றுவிடும் என் ஓட்டம்!

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும் மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும் உறவாக அல்ல என் உயிராக.

காதலித்தால்
இதயம் தொலைந்து போகும்
என்று பொய் சொல்கிறார்கள்

காதலித்துப்பார்
தொலைந்த உன்னை
உன் இதயம் தேடும்..

சேரதுடிப்பது மட்டுமல்ல காதல்
சேராமல் போனாலும் உன் நலனில்
அக்கரைகொள்வதே
உண்மையான காதல்...

நீ தந்த காதலுக்கும்
நீ தந்த வேதனைக்கும்
மிக்க நன்றி...!

வந்துபோகும் மேகம்கூட
கண்ணீர் வடிக்கிறது,
எனக்கு துணையாக.
ஆனால், நீதான் சென்றுவிட்டாய்
யாருக்கோ துணையாக:(((((((

எத்தனை யுகங்கள் கடந்தாலும்
காத்திருப்பேன் ஏன் தெரியுமா?
உன்னை விட,
உன் நினைவுகள்
இதமானவை என்றும் நிஜமானவை...

நான் சாகும் வரை
என்னை சாகடித்துக் கொண்டு இருக்கும்
உன் நினைவுகள்....!

கண்ணீரைகூட இன்பமாய்
ஏற்றேன்
அவை நீ பரிசாக
கொடுத்துச்சென்றவை
என்பதனால்....!

உன் நினைவுகளால்
என் இதயம் நிறைந்த
அந்த அழகான நாட்களை
கவிதையாக எழுதிட
இன்னமும் வார்த்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்
வழிந்தோடும் என் கண்ணீருடன்..
நம் நினைவுகளை
கடந்து வந்த
அந்த வசந்த நாட்களை
நான் மறக்கவில்லை
மறக்கவும் முயல்வதில்லை

நிலவு இருக்கும் தூரத்தை விட ...
நீயிருக்கும் ..தூரம் குறைவுதான் ..
ஆனால் நிலவை காண முடிந்த என்னால் ..
உன்னை காண முடியவில்லையே ...

நீ விட்டுப்போன நினைவுகளோடு...
உனக்காக காத்திருப்பேன் மறு ஜென்மமும் ஆனால் நீ நானாக நான் நீயாக..
அப்போதாவது உனக்கு புரியும், காத்திருத்தல் எவ்வளாவு கடினம் என்று.....!

நீ விலகி சென்றாலும் ,
உன் நினைவுகளை
என்னிடம் பத்திரமாக
ஒப்படைத்து விட்டு செல்கிறாய் ,
நீ வரும் வரை
தனியே காத்துக்கிடக்கறேன்
நானும் ,
புதையலாக்கப்பட்ட
உன் நினைவுகளும் .....!

என் கண்ணில் கடைசி காட்சியும் நீயே
என் இதயத்தின் கடைசி துடிப்பும் நீயே
என் உடலை விட்டு உயிர் பிரியும் போது
உன்னை நினைத்து அழுதுகொண்டே தான் பிரியும்....!

எங்கு சென்றாய்
என்பது தெரியவில்லை...
உன்னை பிரிந்த இடத்தில்
இன்றும் காத்திருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
உன் காலடி சுவடுகளாவது
என் பக்கம் திரும்பாதா என்ற ஏக்கத்துடன்.

சாய்ந்து அழத் தோள் தேடுகிறேன்-
உலகம் என்ன சொல்லுமோ என்று
சத்தமாய் அழக்கூடத் தயங்குகிறேன்-

நேசிக்கும் உறவுகள் பிரிந்து சென்றாலும்,. நேசித்த நினைவுகள் என்றும் நிலைத்து இருக்கும்......

அன்பே !
கீறல் விழுந்த கண்ணாடி என்று
என் மனதை நீ தூக்கி எறிந்துவிட்டாய்
அங்கே கிறுக்கப்பட்டிருந்தது
உன் பெயர் என்பதை அறியாமலே...

காதலை எல்லோருக்கும்
பிடிக்கிறது
காதலர்களைத்தான்
யாருக்கும் பிடிக்கவில்லை....

காத்திருந்து பார் நீ ஆசை பட்டது கிடைக்கும்

கஷ்டப்பட்டு பார் நீ நினைத்தது நடக்கும்

எங்கு சென்றாய்
என்பது தெரியவில்லை...
உன்னை பிரிந்த இடத்தில்
இன்றும் காத்திருக்கிறேன்
என்றாவது ஒரு நாள்
உன் காலடி சுவடுகளாவது
என் பக்கம் திரும்பாதா என்ற ஏக்கத்துடன்...

பல இரவுகள் உறங்கிப்போகாத
எனது இமைகளிடம் கேட்டுப்பார்
கனவிலும் உனது வருகைக்காக
காத்திருந்து ...ஏமாந்ததை
சொல்லி அழும் .....

உண்மையான அன்புக்கு மட்டுமே உன் கண்ணீர்த்துளிகள் தெரியும்!,
நீ மழையில் நனைந்து கொண்டே அழுதால் கூட.....!

என் கனவில் வந்தாள்
வழி தவறி வந்தாயா?
வார்த்தைகளின் ஊடே என் வியப்பை
விதைத்தேன், விடைஇன்றியே விடை கொண்டாள்.......

உறவுகள் மட்டும் நிரந்தரம் அல்ல...
பிரிவுகளும் நிரந்தரம் அல்ல...
நினைவுகள் மட்டுமே நிரந்தரம்....!
20 September at 11:58

உண்மை காதல்!!!
==============
காத்திருப்பது சுகம்
காதலி வருவாள் என்றால் - ஆனால்
காதலி வர மாட்டாள் என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன்!!!
காத்திருப்பேன் ஆயுள் முழுவ‌தும்...
காரணம் - காதல்…உன் மேல் வைத்துள்ள உண்மை
காதல்!!!

ஏதேதோ மாற்றங்கள்
மனதினில்..
காத்திருந்து நீளும்
இரவுகள்..
கனவுகளில் தொலையும்
நினைவுகள்..
உனை பார்த்திட ஏங்கிடும்
கண்கள்..
உனை சேந்திட துடிக்கும்
இதயம்..

உனக்காகவே காத்திருக்கிறேன்
நீ வருவாயென....


அழகை" எதிர் பார்க்கும் ஒருவரிடம் "அன்பை" காட்டாதே;),
உன்னிடம் "அன்பு" வைக்கும் ஒருவரிடம் "அழகை" எதிர் பார்க்காதே:-)

நீ என்னை நினைக்கும்
நிமிடத்தில் நான்
இறந்துவிடுவேனோ தெரியாது -
ஆனால்
நான் இறக்கும் நிமிடத்திலும்
உன்னை நினைத்துக்கொண்டுதான்
இருப்பேன்

நான் எழுதும் கவிதைகளை எப்போது நிறுத்திக்கொள்கிறேனோ அப்போது தான் நான் இறந்ததாக ...நீ நினைத்துக்கொள்

நான் வந்த நேரம்
நீயிருக்கவில்லை நான் செல்லும் நேரமும்
நீ இருக்கப்போவதில்லை

உயிர் இருக்கும் வரை உன்னோடு
இருக்க வேண்டும் என்பது என் ஆசை இல்லை!
உன்னோடு இருக்கும் வரை மட்டும்
உயிர் இருந்தால் போதும்!.

என் கல்லறை சொல்லும்
நான் உனக்கு சொல்ல மறந்து போன
காதல் வசனங்களை,
நான் உன் மீது கொண்ட காதலை
மாயம் கொண்ட
உன் விழிகள்
என்னை காயம்
செய்ததடி...

19 September at 13:27
ஏன் இதயம் உடைத்தாய் நொறுங்கவே - HOW COULD YOU BREAK MY HEART???