Pages

Wednesday, February 23, 2011

Kavithai fr Facebook

நிஜத்தை போலவே நினைவுகளும் சுகமானது ...
உன்னை போலவே உன் நினைவுகளும் சுகமானது ...
நீ அருகில் இல்லை என்றாலும்
உன் நினைவுகள் என்னிடம் என்றும் இருக்கும் ...

என்னை விட்டு சென்ற அவளை
இன்னும் காதலித்து கொண்டு தான் இருக்கிறேன்.
அவளை மறக்க முடியாமல் அல்ல,
இன்னொருவளை
நினைக்க தெரியாமல்...

பிறக்கும் போது
நான் எதையும் கொண்டு வரவில்லை...
ஆனால், இறக்கும் போது
கண்டிப்பாக கொண்டு செல்வேன்...
பாசமான உங்கள்
...நினைவுகளை...!


உன் பெயரை கடல் ஓரத்தில் எழுதி வைத்தேன் ...
அலைகள் வந்து எடுத்து சென்றது ...
முத்துக்கள் என எண்ணி ...


மலருக்கும் ஆசை
மண்ணில் விழாமல் இருக்க...!
எனக்கும் ஆசை
நீ என்னை மறவாமல் இருக்க...!

அவள் என் மார்பில்
சாய்ந்து உறங்கி கொண்டிருக்கிறாள்
ஒரு பக்கம் சந்தோஷம்...
ஒரு பக்கம் வேதனை...
எங்கு என் இதயத்துடிப்பு
...அவளை எழுப்பி விடுமோ என்று !

நிழல் கூட வெளிச்சம்
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான காதல்
உயிர் உள்ள வரை
...துணைக்கு வரும்...!

பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று !

என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ?
என்று எனக்கு தெரியாது...
ஆனால், உனக்கு அழுகை
வந்தாலே என் உயிர் போய் விடும்.

கல்லறை கூட
அழகாகத் தெரியும்
உண்மையான காதல்
அங்கு உறங்கும் போது...

உன் நட்பில் உறங்க ஆசை
விடியும் வரை அல்ல
vuயிர் பிரியும் வரை!

இந்த உலகில் ரசித்து மகிழ,
எத்தனையோ இருந்தாலும்...
அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன் நினைவுகளை மட்டும்..
மரணமில்லா உன் நினைவுகள்
...இன்னும் ஓர் உயிர் அல்லவா எனக்கு.....


என் காதலின் ஆழம் தெரியாமல்
என்னை விட்டு சென்றவள் -நீ
உன் மீது சந்தேகம் நீ உண்மையில்
காதலித்தது உண்டா -காதலின் வலி மரணம்

மவுனமாய் நான்
கண்ணீர் வடிப்பதை
கண்டுமா உனக்கு புரியவில்லை...
நான் உன்னை காதலிக்கிறேன் என்று...

என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

திரியும் இல்லை.
விளக்கும் இல்லை..
ஆனாலும் பற்றிக்கொண்டது..
காதல் தீபம்.......

ஒரு தூண்டிலில்
இரு மீன்கள் மாட்டிக்கொண்டன ...
" காதல் "

நீ அருகில் இருந்த போது
அடி பட்ட காயத்தின் வலி கூட
தெரியவில்லை ...!
நீ அருகில் இல்லாததால்
இதயத்தின் துடிப்பு கூட
...வலிக்கிறது ...!


பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்...!

புன்னகை என்ற முகவரி
உன்னிடம் இருந்தால்
அன்பு என்ற கடிதம்
உனக்கு வந்து கொண்டே இருக்கும் ...

என்னால் முடிந்த வரை
பயணித்து கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன் ...!

vuன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்
...கவலைகளும் மறந்து விடும்...!


வாசித்த கவிதைகளில்...
யோசிக்க வைத்த வரிகள் நீ!
நேசித்த இதயத்தில்...
சுவாசிக்க வைத்த இதயம் நீ!

பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு...!
ஆனால், என்னுள்
...உன் நினைவு இல்லாத நொடிகள் இல்லை...!


உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்...கவலைகளும் மறந்து விடும்...!

பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!


சுவாசிக்க காற்றே இல்லை என்றாலும்
நான் உயிர் வாழ்வேன் ...!
நேசிக்க நீ இருந்தால்...!

நட்பு என்பது
இதயம் போல...
நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும்
உன்னைப்போல...!

காதல்............
சொல்ல முடியாத சுகம்
விழுங்க முடியாத அமுதம்
மறக்க முடியாத கனவு

காதலிப்பதை விட
காதலிக்கப் படுவதே
உண்மையில் சந்தோசம்

விபத்து கண்களால்
வலி இதயத்துக்கு காதலால்

இது கனவா இல்லை நினைவா
என்று கிள்ளி பார்க்கிறேன்
நீ என்னிடம் பேசியதை [கனவில்]

இதயத்தின் வழியாக
கண்கள் பேசுவது
காதல்......!

என் கண்கள் பேசியது உன்னிடம்
உன் இதயம் மறுத்தது மௌனமாய்
உனக்கு தெரியாது
வலி என் உயிர்க்கு என்று ?

வலி அதிகம் என்று தெரியாது
காதலிக்கும் போது
இப்போது உணர்கிறேன்
நீ பிரிந்து சென்ற போது
உனக்கும் வலிக்கும் என்ற கவலையில் நீ ..............?


உன்னை சந்தித்த பொது சிந்திக்க வில்லை - ஆனால்
இப்போது சிந்திக்கிறேன் உன்னை ஏன் சந்தித்தேன் என்று.....
கல் தடுக்கி விழாத - நான்
உன் கண் தடுக்கி விழுந்தது எப்படி?

அவள் நினைவில்லாத நாள்
என் நினைவுநாள்

உந்தன் பெயரை காற்றில் எழுதினேன்
அது காற்றோடு காற்றாய் அடித்து செல்லவில்லை
அனால்... காற்றோடு காற்றாய்..
என் மூச்சோடு மூச்சாய்..
இப்பிரபஞ்சத்தோடு கலந்தது...


நான் எழுதிய கவிதை அனைத்தும் வெறும் வார்த்தைகளே...
அனால் இவை அனைத்தையும் நீ படித்தால்
எனது வார்தைகளுகெல்லாம் உயிர் கிடைத்துவிடும்.......

பார்த்து பழகுவதும்,
பேசி மகிழ்வது மட்டுமா காதல்?????
இல்லை.... இல்லவே இல்லை....
என்னில் நீயுமாய்....!!!!!
உன்னில் நானுமாய்...வாழ்வதே உண்மையான காதல்........


என் ஆயுல் முழுவதும்
உன் அன்பு வேண்டும்.
இல்லையெனில்.....
உன் அன்பு உள்ளவரை
மட்டும்...என் ஆயுல் போதும்.!

உன்னோடு ... உன்னோடு மட்டும் தான் வாழ்கிறேன் தினந்தோறும் கனவில் ........
கனவு முடிந்தும் உன்னோடு வாழ்கிறேன் .. உன் ஞபாகங்களில் ....


தினமும்
வகுப்பில் வாசிக்கும்
அழகிய கவிதை
வருகைப் பதிவேட்டிலுள்ள
உந்தன் பெயர்


புள்ளி வைக்காத
எழுத்து
அழகு...
அதைவிட அழகு
பொட்டு வைக்காத
...உன் நெற்றி.



நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
...உன்னுடன் பேசியதுதான் அதிகம்


கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்
கடல் அலை வந்து
அள்ளிச் சென்றது
அழகான கவிதை என்று!


என் கடைசி ஆசை
நான் இறந்து விட்ட பிறகு
என் இதயத்தை எடுத்து
இதயமே இல்லாத
என் காதலிக்கு கொடுங்க...

My Most Fav :
நான் படித்த மிக சிறந்த கவிதை
உன் பெயர் தான்....
நான் பார்த்த மிக சிறந்த ஓவியம்
உன் முகம் தான்...
அழகான பொருட்கள் எல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன
உன்னை நினவு படுத்தும் எல்லாமே
அழகாத்தான் இருகின்றன...
உன் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை
ஒரு வயலின் இருந்தால் கொடுங்கள்
வாசித்து காட்டுகிறேன்....!
(From Kadhal Desam movie)