Pages

Tuesday, June 21, 2011

புதுக்கவிதைகள்

துன்பத்திலும் இன்பத்திலும் நீ நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம்
"இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை...."

சொர்க்கத்தில் இருப்பவர்கள் கடவுள் என்றால்,
என் நண்பர்களுடன் இருக்கும் போது நானும் கடவுள் தான்.....

உன்னை மறந்த இதயத்தை நினைத்து கொண்டு...
உன்னை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே.....

நான் ஒரு கண்ணாடி என்னை பார்த்து நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்...
நீ அழுதால் நானும் அழுவேன் ஆனால் நீ அடித்தால் நான் அடிக்க மாட்டேன்
"உடைந்து போவேன்"

பாசம் என்று நினைத்து தான் பழகினேன்
பிறகு தான் தெரிந்தது நீ என் நட்பின் சுவாசம் என்று....

உண்மையான காதலுக்கு கிடைக்கும் முதல் பரிசு
கண்ணீர் துளிகள் மட்டும் தான்.....

கட்டுமரம் போல் உன் நினைவுகளை சுமப்பேன்
கரை சேரும் வரை அல்ல... கல்லறை செல்லும் வரை..

உன் இதயத்தை திருடும் சக்தி எனக்கு இல்லை என்றாலும்...!
அதான் உள்ளே இருக்கும் உண்மையான "அன்பை" திருடும் சக்தி
என் நட்பிற்கு மட்டுமே.....

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்
கண்ணில் சோகங்கள் இருந்தாலும்
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்
என்றும் என் மனதில் நீ இருப்பாய் அன்புடன்...

அன்பு என்னும் நூலகத்தில் நான் கண்ட புத்தகம் நீங்கள்...
சில புத்தகங்கள் சிறுகதையாய் முடிந்து விட..
நீங்கள் மட்டும் முடியாத தொடர்கதையாய்
என் மனதில் ஒரு நல்ல நட்பாக....

மனிதன் சிரிக்கின்ற நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம்
ஆனால் அவன் அழுகின்ற நிமிடங்கள் நிஜமானவை..

உறவும் நிரந்தரமல்ல பிரிவும் நிரந்தரமல்ல
நீ அன்பாக பழகிய அந்த இனிய நினைவுகள் மட்டுமே நிரந்தரம்

நான் இறப்பதற்கு எனக்கு பயம் இல்லை..ஆனால்
என் பயம் எல்லாம் நான் இறந்த பின் யார் உன்னை நேசிப்பார்கள்
நான் நேசித்ததை போல...

உன் முகத்தில் உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால்
உணர முடிகிறதோ அவர்கள் தான்....
உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்..!!!

நீ விடும் பட்டம் கூட உயரத்தில் பறக்க மறுக்கிறது
யாருக்கு தான் மனசு வரும் உன்னை விட்டு விலகி செல்ல....

இன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும் என்றாவது
நீ என்னை நினைக்கும் போது
நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக...!!!!

உண்மையான காதலை இழந்த பின்பும் அதை
மறக்காமல் நினைத்து கொண்டு வாழும்
அனைவரும் ஒரு உயிர் உள்ள தாஜ்மஹால்

பிரிந்து விட்டு சந்திப்பவர்களுக்கு
பிரிவு ஒரு வரம் ஆனால் சந்தித்து விட்டு
பிரிபவர்களுக்கு சந்திப்பு ஒரு தவம்

பிரியாமல் இருப்பது உண்மையான அன்பு இல்லை
பிரிந்தும் மறவாமல் இருப்பதே உண்மையான அன்பு...

ஆசைக்கும் அடிமை ஆகாதே அன்பிற்கும் அடிமை ஆகாதே
ஏன் என்றால் இரண்டுமே உங்களை
ஒரு நாள் காயப்படுத்தி விடும்
ஒரு உயிரை நீ நேசிப்பது உண்மை என்றால் ...!
அதை பறவை போல் பறக்க விடு .....!
அது உன்னை நேசிப்பது உண்மை என்றால் ...!
மீண்டும் உன்னை தேடி வரும் .... !
கடந்து போன நினைவுகளை நினைத்து கவலை கொள்வதை விட .. இருக்கின்ற இன்றைய மற்றும் நாளைய எதிர்காலம் பற்றி யோசித்து வாழுங்கள் .. இனியாவது இருக்கலாம் நன்றாக ......
காதல் என்னும் நதிக்கடலில் விழுந்து விடாதே அங்கு அலைகள்கூட கிடையாது உன்னை கரைசேர்க்க.......
என்னை நீ மறந்து விடாதே
அப்படி மறந்தாலும்
என்னிடம் அதை சொல்லி விடாதே
ஏனென்றால் உன் நினைவில்தான்
நான் இன்னமும் என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்......


சிரிப்பதே மேலானது ....
ஏன் அழுகிறோம் என்று விளக்கம் சொல்வதை விட ...!


வாழ்க்கையை கவிதையாக எழுதும் போது
வரிகள் என்னை சுமந்து செல்கின்றது.
வாழ்க்கையெனும் புத்தகத்தில்
காலம் என்னை புரட்டுகிறது.
ஒவ்வொரு வயதும் ஒவ்வொரு பக்கமாய்
அதில் எத்தனை எத்தனை சோகங்கள்
அதில் எத்தனை எத்தனை தாக்கங்கள்
அந்த வாழ்க்கை பயணத்தில்.


பேருந்தின் பயணத்தின் போது இரண்டு பயண சீட்டுகளை வாங்குகிறேன் ஏனென்றால் என் நினேவுகளில் நீ இன்னும் என்னுடனேயே வருவதால்......!

நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும்... !

முகம் பார்க்கும்
போது மட்டும் வரும்
நினைவுகள்முகவரி இல்லாமல் போய்விடும் ...
இதயம் பார்த்து வரும் நினைவுகள்
இறுதி வரை நிலைத்திருக்கும் .....

இரு இதயம் எழுதும் சுகமான கவிதை காதல் .......


பத்து நிமிடங்கள் எழுதினால்
வழிகின்ற எனது கைகள் பல லட்சம்
தடவை உனது பெயரை எழுதினாலும்
வலிப்பதில்லையே ஏன் ?

காதல் சொல்லாமல் தெரிவதில்லை
சொல்லி புரிவதில்லை ...
நான் இறப்பையும்
நேசிப்பேன் ..!
அன்பே அது
உனக்காக என்றால் ..!
கண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுது விடாதே
நான் உன்னை விட்டு பிரிந்து விடுவேன் ....


உயிரோடுதான் இருக்கின்றேன்
உன் நினைவுகளால் வாழவும்
முடியாமல் சாகவும் முடியாமல்...

காதல் என்பதை யார்
வேண்டுமானாலும் கற்பனை பண்ண முடியும் .....
ஆனால் அதன் வலியை காதலித்தவன்
மட்டுமே உணர முடியும் .........!

உன்னை தேடி வரும் உறவை எக்காரனதிற்கும் விலகி செல்லாதே! பிறகு நீ தேடிசென்றாலும் அந்த உறவு உனக்கு கிடைக்காமல் போய்விடும்!!!


நிஜம் என்று நினைத்து
உன்னை தேடி அழைத்தேன்
பிறகுதான் உணர்ந்தேன்......
நீ நிழல் என்று
தவறு உன்னுடையது அல்ல
என்னுடையது
எனக்காக
நான் மட்டுமே........
கல்லறை கூடஅழகாக தெரியும்,
உள்ளே உண்மையான காதல் உறங்கிக்கொண்டு இருந்தால்.........


காதலின் வலியை எனக்கு கற்றுக் கொடுத்தவன் நீ....
அதன் விளைவால்தான்....
இப்பொழுதெல்லாம்,
எனது விழிகளின் ஓரம்
கண்ணீர் துளிகள் ததும்பி நிற்க
தனிமையில் உறைந்துப்போகிறேன்....

நீ தொலைவாக இருந்தாலும்
உன் நினைவுகளை நான்
என்னை விட்டுத் தொலைத்து
விடமாட்டேன் என் அருகிலேயே
வைத்துக்கொள்வேன் ♥♥♥♥♥♥