Pages

Monday, October 24, 2011

இதய ராகம் - 3

விழிகளும் சுமை தான்
மனதிற்கு பிடித்தவர்களை
காண முடியாத போது....!

நீ அழுவதைப் பார்த்து
உன் அம்மா
சிரித்த ஒரே ஒரு நாள்
உன் பிறந்த நாள்.....!

பொய்யான உறவுகளுக்கு முன்னால்
புன்னகையும் ஒரு பொய் தான்...!
உண்மையான உறவுகளுக்கு முன்னால்
கோபம் கூட புன்னகை தான்....!

இமை மூடும் நேரத்தில்
இதயம் சொல்லும்...
நீ உறங்கு!
நான் உறங்காமல்
உனக்காக துடிக்கிறேன் என்று.....!

யாருக்காக சிரித்தாயோ
அவர்களை நீ மறந்து விடலாம்...
ஆனால், யாருக்காக அழுதாயோ
அவர்களை ஒரு நாளும்
உன்னால் மறக்க முடியாது.....

நான் திரும்பாத
பயணம் என மரணம்...
அது வரை
நான் விரும்பாத
பயணம் உன் பிரிவு......

இரவை பகலும், பகலை இரவும் தேடிக் கொண்டிருக்கின்றன. இரவுக்கும் பகலுக்கும் இடையே ...
உன்னுள் தொலைந்த என்னை.
தேடிக்கொண்டிருக்கிறேன் நான்.....!

த‌னிமையில் அழுவ‌து கூட‌ வ‌லிக்க‌வில்லை எனக்கு,
ஆனால் வ‌லிக்குதடி பிற‌ர் முன் சிரிப்ப‌து போல் நான் ந‌டிப்ப‌து........!

வலியோடு இருப்பது
பழகிவிட்டது
புதிதாக ஆறுதல்
தந்து அனாதையாக்கிவிடாதே....!

தூங்காத இமைகளுக்குள்
உறங்கும் என் விழிகள்
சுமந்திருப்பது உன்
நினைவுகளை .......

ஆயிரம் பேர் அருகிலிருந்தும்
எனக்கான உலகத்தில்
என்னை மட்டும்
தனிமையை உணரச்செய்கிறது
உன் பிரிவு ...!

உன்னை பார்த்தவுடனே
எல்லோருக்கும் பிடித்து போகும்.
ஆனால்..
எனக்கு பிடிக்கவில்லை..
எல்லோருக்கும் உன்னை பிடித்திருப்பது.....

நீ நடந்துபோக பாதை இல்லையே
என்று கவலைபடாதே,
நீ நடந்தால் அதுவே ஒரு பாதை.........

தலை கவிழ்ந்து போகிறாய்
கண்ணீர் மொழி பெயர்த்த
உன் மௌனங்களை
அந்த காற்றிடமும் சொல்லமாட்டேன்.
ஞாபகமிருக்கட்டும்........

நொடிக்கு நூறு முறை
உன்னை நினைத்தேன்
ஒருமுறையாவது
நீ என்னை நினைப்பாயா என்று...

இதுவரை
இதயம் மறக்காதது..
நெஞ்சிக்குள் உன்னை மட்டும்தான்....

உனது
வருகைக்காக..
காத்திருக்கிறேன் நான்..
தனிமையின் சிறையில் ....!

உன்னை நினைக்கும் போது,
என்னில் தோன்றுவதை எல்லாம் இப்படி
கிறுக்கிக்கொண்டு இருக்கிறேன்....
எனக்கு கவிதை எழுத தெரியாது என்பதை கூட மறந்துவிட்டு...!

என் இதயத்திற்கு பேச மட்டும் தெரிந்தால்
சொல்லி விடும்
உன்னை சுமப்பதனால் எவ்வளவு வலி என்று....

பிரிவுகள் நிரந்தரமல்ல...
இமைகளில் பிறந்த உறவுகள்
இதயத்தில் இருக்கும்வரை.....!

ஊர் உறங்கும் நேரத்தில் நான் மட்டும் தனிமையாக.... தனிமைக்கு துணையாக :) தனிமைக்காவது என்னை பிடிக்கும் என்று நம்பி ...:(

தேடிப் பாக்க நான் உன்ணை
தொலைக்கவும் இல்லை!
விலாசம் கேட்க நான் உன்னை மறக்கவும் இல்லை.!
நலம் விசாரிக்க காலம் நம்மை பிரிக்கவும் இல்லை.!
ஆனால் எங்கே போனாய் நீ...??

காதலே நீ
ஏற்படுத்திவிட்டுப் போன
காதல் காயங்களிலிருந்து
வடியும் ரத்தம்
என் கவிதைகள்...!

கனவுகள் ஆயிரம் இருந்தாலும்
நினைவுகள் ஒன்றை மட்டும் நேசிப்பதே
நிஜமான வாழ்க்கை..!

வாழ்க்கையை கவிதையாக எழுதும் போது வரிகள் என்னை சுமந்து செல்கின்றுது...