Pages

Friday, November 4, 2011

இதய ராகம் - 4

காதலும் கடவுளும் ஒன்று !
வசப்படாவிடில் கண்ணுக்கு புலப்படாது !
வசப்பட்டு விட்டால் வேறு எதுவும் தெரியாது!

காதலித்து தோற்றவர்களின் வழியை விட
காதலை சொல்லாமல் தோற்றவர்களின்
வேதனைதான் அதிகம் ....

எதிர் பார்க்கும்போது கிடைக்காத அன்பு,
எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம்,
இருக்காது....!

உறவும் நிரந்தரம் அல்ல...
பிரிவும் நிரந்தரம் அல்ல...
நீ அன்பாகப் பழகிய அந்த இனிய நினைவுகள்
மட்டுமே நிரந்தரம் எனக்கு......!

உனக்குள் தொலைந்திட கனவு கண்டேன் .. இன்று உன் நினைவுகளின் நிதமும் தொலைகிறேன் ..!

நினைவில் வைத்து
கனவில் வருவது
அல்ல
,காதல்,
மனதில் வைத்து
மரணம்வரை தொடர்வதே
உண்மையான
,காதல்,

தூசு விழுந்த கண்களும்,
காதலில் விழுந்த இதயமும்,
கலங்கிக் கொண்டே தான் இருக்கும்....

கொடுப்பது என்று முடிவெடுத்துவிட்டால் உங்களிடம் இருப்பதில் சிறப்பானதைக் கொடுங்கள். -

தனிமை.....
அனைவரும் இருந்த போதும் நீ இருந்தாய் என்னுடன் உணரவில்லை நான்...

நான் மட்டும் இருந்த போது உணர்ந்தேன் நீ என்னுடனே இருப்பதை...
என்னை வதைப்பதை...

நீ மறக்க நினைத்தாலும்
உன்னுடன் இருக்கும் என் நினைவுகள் மறையாது

ஒரு முறை உச்சரிதுப்பர் - என் பெயரை
உனக்குள் நான் இருபேன்....!

எப்படியோ ....'
நொடிக்கு நொடி
உன்னை நினைத்துக் கொள்வது மட்டும்
தானாகவே செயல்படுகிறது
என் இதய துடிப்புகளுடன்.......!

என்னை
ஒதுக்கி வைக்க
ஊரு சனம்
ஒன்று சேரத்
தேவையில்லை
உன் பிரிவு
ஒன்றே போதும்....

எதையும் யோசிக்காமல்
பேசிக் கொண்டிருந்தது
ஒரு காலம்....
இப்போது
எதுவும் பேசாமல்
யோசித்துக் கொண்டிருக்கிறேன்'
உன்னால்.....!

உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கும்
அற்புத நிமிடங்களில்,
அனைத்தும் மறந்து
ஊமையாகிவிடுகிறது என்
உலகம் ......!

காதல்
கண்கள் கைது செய்து
இதயத்தில் சிறை வைக்கும்
இனிமையான ஆயுள் தண்டணை..........

நான் வாழும் வரை என்னுள் நீ
வாழ்வாய்
என்னுள் நீ வாழும் வரை
உன் நினைவோடு நான்
வாழ்வேன்...

நீ அருகில் இருந்த போது
அடி பட்ட காயத்தின் வலி கூட
தெரியவில்லை ...

நீ அருகில் இல்லாததால்
இதயத்தின் துடிப்பு கூட
வலிக்கிறது ...

நீ பார்த்த நிலா அழகா?
நான் பார்த்த நிலா அழகா?

நீ வாணத்தை பார்க்கிறாய்...!
நான் உன் முகத்தைபார்க்கிறேன்....♥

சிலருக்கு மழைத்துளி பிடிக்கும்
சிலருக்கு பனித்துளி பிடிக்கும்
காதலித்து பாருங்கள்
கண்ணீர்த் துளியும் பிடிக்கும்....

அற்புதமான காதலை மட்டுமல்ல ,
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான் எனக்கு தந்தாய்...

ஒவ்வொருவரின் மனசுக்குள்ளும் ஒரு ஊஞ்சல் இருக்கிறது, நமக்கு மிகவும் பிடித்தவர்கள் அதில் எப்பொழுதும் ஆடிக்கொண்டே இருக்கிறார்கள்.!

"மரணம்" என்பது ஒரு நொடியில் உயிர் போகும் - ஆனால் "பிரிவு" என்பது ஒவ்வொரு நொடியும் உயிர் போகும் ....

உன் மெளனம் பார்த்து பார்த்தே
ஊமையாகிய போன என்னிடம் வந்து
கேக்கிறாய்
ஏன் இந்த மெளனம் என்று??

நினைவெல்லாம் உன்னோடு ,
எதற்காக விட்டுச்சென்றாய்
இந்த பாழாய்ப்போன
உயிரை மட்டும் என்னோடு????????

உன்னை காக்கவைக்கும்
உறவை விட
உனக்காக காத்திருக்கும் உறவை
நேசி...என்றும்...நீ தேடும்
சந்தோசம் உன்னை வந்து சேரும்....

என் இதயம்
என்னிடம் தான் இருக்கிறது
என்றாலும் - அதை
சாவியின்றி திறக்கும் சக்தி
உன் நினைவுகளுக்கு இருக்கிறது ...!

அன்பு இல்லாமல் பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட உரிமையோடு திட்டும் ஒரு வார்த்தையில் இருப்பது தான் உண்மையான அன்பு......

கனவுகள் கூட
நிஜம்தான்........
என் கனவில் நீ வந்தால்.....

உனக்குள் நானும் எனக்குள் நீயும் எப்போதுமே வாழ்ந்துகொண்டிருப்பதால் பிரிவு என்பது
நமக்குள் இல்லை

உண்மையான அன்பை சுமக்கும் இதயம் ஏமாறலாம். ஆனால், யாரையும் ஏமாற்றாது...

கண்கள் அழவில்லை
உதடுகள் சொல்லவில்லை
இதயம் மட்டும் வலிக்கிறது
உன்னை காணாமல்...

சுமையென தெரிந்தும் சுகமாக சுமந்தேன்..... இதய கருவறையில் உன் நினைவுகளை.....

நீ என் கண்ணுக்குள் இருப்பதால் என்னுள் இருந்து கண்ணீர் வருவதில்லை.. .!
என் கண்களிலிருந்து கண்ணீர் வருகையில் நீ என்னுள் இருப்பதில்லை.. .!

யார் உன்னை அதிகம் வெறுக்கிறார்களோ...
அவர்கள்தான் உன்னை
ஆழமாக நேசிக்கிறார்கள்-- உன்னை
மறக்கமுடியாமல்....
தவிக்கும் நேரத்தில்
வருவதே வெறுப்பு......!

இன்று உணர்ந்தேன் என் நினைவில் நீ இருக்கிறாய்,
உன் நினைவில் நான் இருக்க காலங்கள் கடந்து விட்டது என்று..

தொலைந்த நேரங்களில் தொலைவது
வாழ்கை என்று அறியாமல் இன்னும்
தொலைக்கிறேன் நேரத்தை
தனிமையில் நான் வாழ்கையை நினைத்து .....

பிறக்கும் போது
நான் எதுவுமே கொண்டு வரவில்லை
ஆனால் இறக்கும் போது கண்டிப்பாக கொண்டு செல்வேன்
“உன் நட்பின் நினைவுகளை.....!

நீ விரும்பும்
இதயம்
உன்னை தவிக்க விட்டு
செல்லும்போதுதான் - நீ
தவிக்க விட்ட
இதயத்தின்
வலி புரியும்........

காரணம் இல்லாமல் யார் மேலும் அன்பு வருவதில்லை....
ஆனால் அந்த காரணம்தான் யாருக்கும் தெரிவதில்லை.... !