இதய ராகம் - 5
அன்பு தான் இந்த உலகத்தில், எல்லா நோய்களுக்கும் மருந்து. அந்த அன்பே பொய்யானால், உலகத்தில் அதைவிட கொடிய நஞ்சு எதுவும் இல்லை..
எதன்மேல் நாம் அன்பு செலுத்துகிறோமோ,
அதுவே நம்மை உருவாக்குகின்றது......
எத்தனை வலிகளுக்குப் பின்னரும் எதுவுமே நடக்காத இயல்பான சிரிப்புடன் இருப்பது சிலருக்கே முடிகிறது..
அனுதாபத்தோடு பார்க்கும் கண்களுக்குக்
குற்றவாளியும் நிரபராதியே.
ஆத்திரத்தோடு பார்க்கும் கண்களுக்கு
நிரபராதியும் குற்றவாளியே......!
புன்னகை செய்வதற்கு மட்டுமே உங்கள்
இதழ்களை பயன் படுத்துங்கள்'''
மற்றவர்கள் மனம் புண்படுவதற்கு பயன்படுத்தாதீர்கள்....!
நாம்
சிலரை வெறுப்பதற்குக்
காரணம் அவர்களைச் சரியாக
புரிந்து கொள்ளாததுதான்.
அவர்களைச் சரியாகப் புரிந்து
கொள்ளாததற்குக் காரணம் நாம் அவர்களை
வெறுப்பதுதான்...
உள்ளுக்குள் நீ
இருப்பதால் தான்....
உயிரோடு நான்
இருக்கிறேன்...!
முற்றுப் புள்ளி
எட்டாத எனக்கு
கேள்வி குறியாய்
உன் நினைவுகள் மட்டும் ......!
அவள் நினைவுகளும் ஒரு தூசி போன்றதுதான்........
வந்து சென்றது தெரியவில்லை
ஆனால் கண்கள் மட்டும் இன்னும் கலங்கி நிற்கிறது..... !
புரிந்து கொள்ளாத இதயங்கள் காயப்படுத்தினால்
இதயம் அதிகம் துடிக்கும்...
புரிந்து கொண்ட இதயங்கள் காயபடுத்தினால்
இதயம் துடிப்பதே நின்று விடும்........
கண்கள் கூட கவிதை பேசும் உன்னை பார்கையில் .....!
ஆனால் கவிதை கூட கண்ணீர் சிந்தும் உன்னை பிரிகையில் .....!
உடலுக்கு உயிர் கூட சுமைதான்,
நீ உயிராக நினைக்கும் ஒரு உயிர்,
உன்னை உணர்ந்து கொள்ளாமல் போகும் போது.........
உன் மீது நான் வைத்த அன்பினால்
உன்னை சிரிக்க வைக்க பலமுறை
நான் அழுகின்றேன்......
இரவில் தூங்காத விழிகள் ஓரம் நீ தான் நிக்கின்றாய் கண்ணீர் துளிகளாய் ..!
இரவில் என் கண்கள் தூங்கினாலும்,
என் நினைவுகள் இன்னும் தூங்கவில்லை...
உன்னை மட்டும் நினைக்கும் இந்த இதயத்திற்கு
உன் நினைவுகள் துணையாகி விட்டது..!
விழி சிந்தும் கண்ணீரில் ..அலையென வரும் உன்
நினைவுக்குள் மூழ்கி துடுபிழந்த படகானேன் ..!
என்னையும் ...என்னுள் உன்னையும் .....அழகான உன் நினைவுகளையும் இங்கே விட்டு செல்கிறேன் ...!
மறந்து விடாதே ..இறந்து விடுவேன் ..! ♥
உன்னுடன் பேச வருகையில்
வார்த்தைகளை சேகரிக்கிறேன்.
நீ!
பேசி பிரிகையில்
வலிகளை சேகரிக்கிறேன்..!
என்னால் எழுதவே
முடியாத கவிதை
அவள் !
என்றாலும் அவளால்
உயிர் வாழும்
கவிஞன் நான்..!
வெறுத்த என்னையே உன்னால் மறக்க முடியாத போது .
விரும்பிய உன்னை மட்டும் என்னால்
எப்படி மறக்க முடியும் ???
உறவாக இருந்தால் என்றோ மறந்திருப்பேன்
உயிரோடு அல்லவா கலந்துவிட்டாய்
எப்படி மறப்பது உன்னை.. ...!
உன்னை.!
- நினைத்து கொண்டு ...
வாழவில்லை..
உன்னை .!
- நினைப்பதால்.!
தான்
வாழ்கிறேன்...
உனக்கென காத்திருக்கும் நேரங்களும் இனிமையானது...
உனது நினைவுகளுடன் வாழ்வதால்.....
நீ கொடுத்ததில் விலை மதிக்கமுடியாதது எது தெரியுமா?
நீ உனக்கே தெரியாமல் எனக்கு கொடுத்த உன் நினைவுகள்தான்.....
நேசித்த இதயத்தை காயப்படுத்தும் போது காயப்பட்ட இதயத்தை விட காயப்படுத்திய இதயத்துக்கு தான் மரண வலி......
உன் அருகில் வாழ முடியவில்லை ......
உன் நினைவுகள் மட்டும் ஆறுதலாக "என் இதயத்தில்......
நீ அதிகமாக நேசிக்கும் உள்ளத்தை எக்காரணம் கொண்டும் இழக்காதே.
இழக்கப்போகிறம் என்று தெரிந்தால் அதிகம் நேசிக்காதே....
பிரிவுகளை சந்திக்கும் போதுதான்
உண்மையான அன்பை புரிஞ்சிக்கொள்ள முடியும் .....
நீங்கள் எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம்
எதை மிச்சமாக வைத்திருக்கிறீர்கள் என்பதே மிக முக்கியமானது..!
எதிர் பார்க்கும்போது கிடைக்காத அன்பு,
எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம்,
இருக்காது....!
உனக்குள் தொலைந்திட கனவு கண்டேன் .. இன்று உன் நினைவுகளின் நிதமும் தொலைகிறேன் ..!
நினைவில் வைத்து
கனவில் வருவது
அல்ல
,காதல்,
மனதில் வைத்து
மரணம்வரை தொடர்வதே
உண்மையான
,காதல்,
தூசு விழுந்த கண்களும்,
காதலில் விழுந்த இதயமும்,
கலங்கிக் கொண்டே தான் இருக்கும்....