Pages

Sunday, December 19, 2010

நான் ரசித்த கவிதைகள்-2

அன்பின் ஆழம் எவ்வளவு பிரிவின் போது
தான் உணர முடியும்
அதை உணர்கிறேன் உன்னை சந்திக்காமல்
இருக்கும் இந்த நிமிடங்களில்........


துன்பத்திலும் இன்பத்திலும் நினைவில்
கொள்ள வேண்டிய ஒரே விஷயம்...
இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை...

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும்
தெரியும் ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்....

நான் நேசிக்கும் உண்மையா உறவு
யார் என்று தெரியுமா ? நீ
தனிமையில் இருக்கும் போது யாருடன்
பேச நினைக்கிறாயோ அவர்கள் தான்....

உலகம் என்பதில் நீ ஒரு ஜீவன்
ஆனால் உன்னை நேசிக்கும் ஒரு
ஜீவனுக்கு நீதான் "உலகம்"

என் தவிப்பு அவளுக்கு சிரிப்பாக இருக்கலாம்....!
அவளுக்கு தெரியாது அவள் சிரிப்புக்காக தான்
நான் தவித்து கொண்டு இருக்கிறேன் என்று...!

உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...

என் நினைவாக உன்னிடம் ஒன்றுமே இல்லை
ஆனால் என்னிடம் உன் நினைவை தவிர வேறு ஒன்றும் இல்லை.....

நீ நினைக்கிறாயோ இல்லையோ விக்கல் வரும் போதெல்லாம்
நான் நினைத்து கொள்கிறேன் நீதான் என்னை நினைக்கிறாய் என்று

இதயம் என்பது துடிப்பதற்கு மட்டும் அல்ல....
நல்ல உள்ளங்களை நினைப்பதற்கும் தான்...

உன் பிறப்பிடம் வேறு என்றாலும்
எப்போதும் உன் இருப்பிடம் என் இதயம் தான்....

காற்றிலும் அவள் இருக்கிறாள் என்று உணர்ந்தேன்
தூசியாய் வந்து என் கண்களை கலங்க வைத்த போது...