Pages

Sunday, December 12, 2010

Kavithai

உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...


முந்தைய நொடியில்
அழகானவள்!
அடுத்த நொடியில்
பேரழகியானாள்!!
காத்திருக்கிறேன்
அடுத்த நிமிடத்துக்கு♥♥♥

உச்சரிக்கத் தெரியாத
உன் வார்த்தைகளில்
"அலகு"ம், "அளகு"ம்
கூட,
"அழகு" தான்♥♥♥

யாராவது பாத்துட போறாங்க
என கூறிக்கொண்டே
என் கைகளை
இறுக்கிப் பிடித்த
உன் கைகளுக்குள்
பதறுகிறது என் மனம்♥♥♥

எத்தனை எழுதியபோதும்
எல்லாம்
ஆரம்பமாகவே!!
உன்னைப் பற்றி
என்பதால்♥♥♥

முந்தைய நொடியில்
அழகானவள்!
அடுத்த நொடியில்
பேரழகியானாள்!!
காத்திருக்கிறேன்
அடுத்த நிமிடத்துக்கு♥♥♥

எத்தனை எழுத்துக்களில்
கவிதை கேட்டபோதும்,
உன் பெயரையே
எழுதினேன்!!
எழுத்துக்களை எண்ணாமல்
உன்னை எண்ணியதால்♥♥♥

நீ ஆறுதல்
சொல்வதாலேயே
அடிக்கடி விழுகிறேன்
எங்கிருந்தாவது♥♥♥

No comments: