கைது செய்யப்பட்டாலும்...
இமைக்கும் இமைகளுக்கு
இடையில் இடைவிடாமல்
துடிக்கும் உன் நினைவுகள்...
உனக்கவே என்றும் துடிக்கும்
என் இதயத்தை ஒரு
நொடி நினைத்து பார்...
என் கண்களில்
நீ உன்னைப் பார்கிறேன்...
என்கிறாய்
நானோ உன்
கண்களில் என்
வாழ்வைப் பார்கிறேன்...
என்னதான் தென்றல்
இதமாய் வருடினாலும் உன்
இமைகள் தலைசாய்க்கும்
வருடலுக்கு ஈடாகுமா...
பிரிவை மட்டுமே
பிரியமாய்
பரிசளித்த என்
பிரியமானவளே...
என்னைப்
பிரிந்திருப்பது
தான் உனக்குப் பிரியமா...
சொர்க்கமாய் நினைத்தவை
எல்லாம் இன்று
சொப்பனமாய்...
மாறி என்னை
நரகத்தில் நடமாட
வைத்திட்டதே...
*கண்களில் விழுந்த
துசியாய் நிற்குதடி
உன் நினைவுகள்...
கசக்கவும் மனமில்லை...
கண்கள் திறக்கவும்
மனமில்லை...
மணல் பாதையில் என்
கைபிடித்து நடக்க...
கர்வமாய் தலைநிமிர்ந்து
நடந்தேன்...
இன்று தலை குனிந்து
நடக்கிறேன் அதே மணல்
பாதையில்...அவள்
பாதச்சுவடுகளை தேடியபடி...
கண்டிடுவேனோ உந்தன்
மதி முகம்...
முடிவில்லா தொடர் புள்ளியாய்
காத்திருக்கிறேன்...
உந்தன்
மதி முகம் காண....
மிக எளிதாய்
சொல்லிவிட்டாய்
காத்திரு...
ஓராண்டு ஓர்
நொடியில் ஓடிடும்
என்று ஓடுதடி
எளிதாய்...
ஒவ்வொரு நொடிகளும்
ஒவ்வொரு யுகங்களாய்...
உன் நினைவுகளின்
அருகில் வாழும் நான்
உன் நிஜங்களின்
அருகில் வாழ்வது
எப்போது...
காதல் எத்தனை பெரிய
சமுத்திரம் என்று
உணர்ந்தது கொண்டேன்
உன் பிரிவில்.....
என் கண்கள் உன்னை
அறிமுகம் செய்த
நாள் முதல் என்னையே
மறந்துவிட்டது...
எங்கு பார்த்தாலும் அது
உன்னையே
நினைவுபடுத்துகிறது.
உன்னை பார்க்கும் விழிகளுடன்
சண்டை போடுகிறது இமைகள்...
இவை இரண்டுக்கும் தெரியாது
நீ எனக்கானவள் என்று..
நான் விலகிச்சென்ற நொடிகளில்
என்னை சுற்றி வந்தவள்...
நான் இரசிக்க துடிக்கிறேன்
வர மறுக்கிறாள்...
நமது அழகிய காதல்
நினைவுகள் என்
தோல்மேல் சாயும் உன்
தேகம் போல மென்மையாய்
இதயத்தை கொதிவிடுகிறது...
நித்தமும் உறங்கிப்போகும் என்
இமைகளுக்கு கனவில்
கவிதையாய் உன் அழகிய முகம்...
உலகமே ஒதிக்கி
வைத்துப் பார்ப்பதை
உணர்கிறேன்...
நீ என்னைக் கைவிட்டதால்...
இதயம் இருப்பது என்னிடம்
தான் என்றாலும் அது
துடிப்பது உன் அன்பில் தானே...
உன் பிரிவில் என் இதயம்
தரையில் விழுந்த
மீனாய் துடிப்பதை என்றுதான்
நீ உணரப் போகிறாய்...
உன் கண்களில் உலகம் பார்த்த
என்னை குருடனாய்
நரகத்தில் வாழச்சொல்கிறாய்...
அதையும் நிறைவேற்றுவேன்
என் வாழ்வாக நீ வந்தால்...
***தவறு****
உன்னை பார்த்தது
என் தவறல்ல...
என் விழிகளின் தவறு...
உன்னில் நான் வசமானது
என் தவறல்ல...
என் இதயத்தின் தவறு...
உன் நிழல் செல்லும் பாதையில்
என் பாதம் வந்தது
என் தவறல்ல...
என் மனதின் தவறு...
உன் மழலை பேச்சில்
மயங்கிப்போனது
என் தவறல்ல...
என் செவிகளின் தவறு...
இப்படி என்னை உன்வசமாக
மாற்றியது என் தவறா...
அது உன் தவறு...
எனக்கு தெரியாமலே என்னை
கொள்ளை கொண்டது
என் தவறா ...
அது உன் அழகின் தவறு...
உன் நினைவுகளுடனும்...
கனவுகளுடனும்...
நான் வாழ்ந்த நாட்கள் போதும்...
உன் கூர் விழியால் இன்னும்
எத்தனை நாள் என்
இதயம் கீரப்போகிறாய்...
என்னுடன் வந்துவிடு என்ற
என் கேள்விக்கு...
இன்று மௌனம் என்னும் ஆயுதம்
கொண்டு மீண்டும் மீண்டும்
ஏன் தவறு செய்கிறாய்.....
இதழ் திறந்து வரம் தா கண்மணி...
காத்திருக்கும் என் கரங்களை
ஏமாற்றாதே...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
உன்னிடம் இருந்து வரும்
ஒரு வரி குறுஞ்செய்திக்காக.....
ஓராயிரம் முறை
கடிகாரம் பார்கிறேன்...
கடிகார முள்கூட
துரோகம் செய்கிறது...
கடிகார முள்ளின் நகர்வில்
என்னிதயம் துடிக்கிறது...
உன் முகம் மறையும்
நொடிகள் நினைவாய்
மாறிவிடுகிறது அடுத்த
நொடியில்.....
தோற்றுத்தான் போகிறேன்
உன் அழகில்...
உன் நினைவுகளை சுவாசித்த
படியே வலம்வருகிறது...
உனதாகிப்போன என் இதயம்.....
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
உன் காதலை
மிக எளிதாய்
மூன்றே
வார்த்தையில் சொல்லிவிட்டாய்.....
I LOVE YOU...
என்று.....
நான் உன் மீது
கொண்ட
காதலை
சொல்ல வார்த்தைகள்
இல்லாமல்...
துடித்துக் கொண்டிருக்கிறேன்...
உன் நினைவின் பிடியில்...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
கண்கள்
என் அழகான
தேவதையை...
அறிமுகம்
செய்து வைத்த
முத்துகள்...
என் கண்கள்..
இன்று தலை குனிந்து
நடக்கிறேன் அதே மணல்
பாதையில்...அவள்
பாதச்சுவடுகளை தேடியபடி
உன் காதலை
மிக எளிதாய்
மூன்றே
வார்த்தையில் சொல்லிவிட்டாய்.....
I LOVE YOU...
என்று.....
நான் உன் மீது
கொண்ட
காதலை
சொல்ல வார்த்தைகள்
இல்லாமல்...
துடித்துக் கொண்டிருக்கிறேன்...
உன் நினைவின் பிடியில்...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
கண்கள்
என் அழகான
தேவதையை...
அறிமுகம்
செய்து வைத்த
முத்துகள்...
என் கண்கள்..
இன்று தலை குனிந்து
நடக்கிறேன் அதே மணல்
பாதையில்...அவள்
பாதச்சுவடுகளை தேடியபடி
வேண்டாம் என்று
தூக்கிப்போட்ட
உன் நினைவுகளுக்குள்
இன்னும் தேடுகிறேன்
என்னை!!
காதலியை ஏமாற்றிய
காதலன்!!!
காதலனை ஏமாற்றிய
காதலி!!!
மொத்தத்தில்
காதலை ஏமாற்றிய
காதலர்கள்!!!!
காதலியை ஏமாற்றிய
காதலன்!!!
காதலனை ஏமாற்றிய
காதலி!!!
தற்கொலை செய்து
கொள்ள துடிக்கிறது
காதல்!!!!!
ஏமாற்றப்படுவது
காதலனோ!! காதலியோ!!
மட்டுமல்ல
ஒவ்வொரு
காதலும் தான்!!!