Pages

Monday, December 13, 2010

நான் ரசித்த கவிதைகள்

காற்றை சுவாசிக்க முடியும்,
ஆனால் பார்க்க முடியாது
அது போல் உன்னை பார்க்கா விட்டாலும்
உன் நட்பை காற்றை போல் சுவாசிப்பேன் என்றும்..........

நினைவுகள் என்பது கடல் போல
அலைகள் வரும்போது அதை விட்டு விலக தோன்றும்.....
தொலைவில் இருக்கும் போது ரசிக்க தோன்றும்...

உறங்க மறுக்கும் இமைகளுக்கும்...
மலர துடிக்கும் நினைவுகளுக்கும்
இடையே ஒரு பொருத்தம் தான்
"தூக்கம்"

காத்திருப்பது கொடுமை தான் ஆனால்
காத்திருந்து கிடைப்பது உன் அன்பு என்றால்
நான் இந்த மண்ணை விட்டு செல்லும் வரை
காத்திருப்பேன்

நீ உனக்காக அழுகிறாய் என்றால்
யாரையோ நேசிக்கிறாய் என்று அர்த்தம்...
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய் என்றால்
யாரோ உன்னை நேசிகிரர்கள் என்று அர்த்தம்.....

கருவறையை விட்டு கீழே இறங்கி
கல்லறையை நோக்கி நடந்து செல்லும்
தூரம் தான் வாழ்க்கை....

அதிகமாக சிரிக்க வைப்பதும்
அதிகமாக அழ வைப்பதும்
நம்மை உண்மையாக நேசிப்பர்வர்கள்
மட்டுமே....

நட்பு என்பது கலங்கரை விளக்கம் போல
நீ அதை விட்டு தூரத்தில் இருந்தாலும்
அன்பு என்ற வெளிச்சத்தில் கொடுத்து
கொண்டே இருக்கும்......

இன்று என்னை பிரிந்தாலும்
மறந்தாலும் என்றாவது நீ
என்னை நினைக்கும் போது...
நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக...

இமைகள் திறந்து நேசிப்பதை விட
இதயம் திறந்து நேசித்து பார்....
உயிர் பிரியும் வரை உன் அன்பு நீடிக்கும்....

வெற்றிகும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்
கடமையை செய்தால் வெற்றி
கடமைக்கு செய்தால் தோல்வி

காதல் ஒரு மயக்க மருந்து
மயங்கி விழுந்தால் கல்லறையில் தான்
உனக்கு விருந்து

தினமும் தேடி கொண்டுதான் இருக்கிறேன்...!
தொலைந்து போன என் இதயத்தை அல்ல..!
யாருக்காக தொலைக்க போகிறேன் என்று...

நீ விடும் பட்டம் கூட உயரத்தில் பறக்க மறுக்கிறது
யாருக்குதான் மனசு வரும் உன்னை விட்டு விலகி செல்ல...

முள்ளோடு வளரும் ரோஜாவை யாரும் வெறுப்பதில்லை
அன்போடு வளரும் நட்பை யாரும் மறுப்பதில்லை...

தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை
அனால் உன் நினைவுகள் மோதி என் உள்ளம்
வலிக்கிறது... சுமையாக அல்ல சுகமாக...

சில நினைவுகள் பல உறவுகளை
நினைவு படுத்தும்...
ஆனால் எனக்கு உறவுகளே
உன் நினைவுகள் தான்....

என் இதயம் துடிகிறதோ இல்லையோ
நன்றாக நடிக்கிறது
உன்னை மறந்து விட்டேன் என்று.....

நட்பே உன்னை சந்திக்கும் போது
நான் சிந்திக்கவில்லை...
இப்போது சிந்திக்கிறேன் எப்போது
நாம் சந்தித்தோம் என்று....

நினைவோடு தான் பேச முடியவில்லை
கனவோடு பேசலாம் என்றால் உன்
நினைவுகள் என்னை உறங்க விடுவதில்லை.....

உனக்குள் துடிக்கும் இதயத்தை விட
உனக்காக துடிக்கும் இதயத்திற்கு
வலி அதிகம்

என் நினைவாக உன்னிடம் ஒன்றுமே
இல்லை... ஆனால் என்னிடம்
உன் நினைவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை...

நட்பு என்பது இதயம் போல நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும் ... உன்னை போல.....

முகங்கள் தேவை இல்லை...
முகவரிகள் தேவை இல்லை..
தொலைவில் இருந்தாலும் உன் நட்பை
துளி கூட மறந்ததில்லை...

கோபம் என்பது பிறர் செய்யும்
தவறுக்கு..! உனக்கு நீயே கொடுத்து
கொள்ளும் தண்டனை ...!

உன் மனம் நோகும் போது சிரி..
பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை...!

பூ :
அன்று அவளுக்காக என்னை கொன்றாய்...
அவளோ உன்னையே கொன்று விட்டாய்..
இன்று உன் கல்லறையின் அருகில் யார்
இருக்கிறார் என்னை தவிர.....