Pages

Monday, December 13, 2010

KAVIDHAIGAL

பிரிவுகள் நிரந்தரம்

உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன்
என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்

நாளை
சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்

எல்லாம்
முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்

எவ்வளவோ
முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்


நான் பேசிய
வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்

நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து
போகலாம்

உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்

இந்த
உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்

உன் நினைவுகள்
என்னில்
என்றும் உயிர் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.

பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல ...

என்னக்காக உன்னை விரும்பினேன்
உனக்காக உன்னை பிரிகிறேன்
உனக்காக என்பதால் இந்த பிரிவையும்
விரும்ப ஆரம்பித்து விட்டேன்!

நீயும்... நானும்

உன் முகத்தை.....
முதன் முதலாக
புகைப்படத்தில் பார்த்தேன்...
இனம் புரியாத ஒரு உணர்வு...
என் மனதிற்குள் ! அன்றே
முடிவு செய்தேன்...
மணந்தால்....
உன்னைதான் மணப்பதென்று...